4 Manarkeni App Installation-(7/07/2025)
மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்தல்
இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜெயங்கொண்டம் (தெற்கு)
நாள்: 7.7.2025
இன்று நான் எங்கள் ஊரில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவர்களை சந்தித்து அவர்களுக்கு மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்த நிகழ்வு.
மணற்கேணி செயலி என்பது தமிழக அரசால் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கல்வி செயலி ஆகும். இதில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அனிமேஷன் காணொலிகளாக வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான விளக்கங்கள் இதில் அதிகம் உள்ளன. இது தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் வழங்கப்படுகிறது.
மணற்கேணி செயலியில் உள்ள முக்கிய அம்சங்கள்:
- 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் இதில் உள்ளன.
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாடங்கள் உள்ளன.
- அனிமேஷன் மூலம் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன.
- பாடங்கள் வகுப்புகள் மற்றும் பாடப்பொருட்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
- மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment